ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனை

தமிழ்நாடு பட்ஜெட் தயாரிப்பு குறித்து இரண்டாவது நாளாக இன்று முதல்வர் விஜய் ஆலோசனை நடத்துவது குறித்து...

CM Vijay

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :3 ஜூலை 2026, 8:04 am IST

தமிழ்நாடு பட்ஜெட் தயாரிப்பு குறித்து இரண்டாவது நாளாக இன்றும் முதல்வர் ச. ஜோசப் விஜய் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

2026-27-ஆம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவெக சாா்பில் அளிக்கப்பட்ட தோ்தல் வாக்குறுதிகள் அதில் அறிவிப்பாக வெளியிடப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

குறிப்பாக, மகளிா் உரிமைத் தொகை ரூ.2,500, ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டா்கள் உள்ளிட்ட அறிவிப்புகளைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆய்வு செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துறை வாரியாக வரும் ஜூலை 22-ஆம் தேதி வரை பட்ஜெட் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அதன் அடிப்படையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மாநில அரசின் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், தற்போதைய திட்டங்களின் செயல்பாடு மற்றும் துறைகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக, முதல்வா் விஜய் தலைமையில் துறை ரீதியான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 2) தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்றும் (ஜூலை 3) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் கலந்தாலோசிக்கவுள்ளார்.

Summary

TN Budget: CM Vijay holds consultations today for the second consecutive day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.