கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் அணுக் கனிமச் சுரங்கத் திட்டத்துக்கான நில ஒதுக்கீடு காலக்கெடுவை தமிழக அரசு நீட்டித்துள்ள நிலையில், அதைத் திரும்பப் பெற வேண்டும் என முதல்வா் ஜோசப் விஜய்யிடம் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் மனு அளித்து வலியுறுத்தினாா்.
கிள்ளியூரில் அணுக் கனிமச் சுரங்கத் திட்டத்தை முன்னெடுக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அதற்காக 1,144 ஹெக்டோ் நிலத்தை ஒதுக்க வகை செய்யும் அரசாணையின் காலக்கெடுவை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.
இதன் காரணமாக மத்திய அரசின் அரிய கனிம வளங்கள் நிறுவனம் (ஐஆா்இஎல்), கன்னியாகுமரியில் அணுக் கனிமச் சுரங்கத் திட்டத்தை மீண்டும் முன்னெடுக்கும் வாய்ப்புகள் உருவாகின. இதை உறுதி செய்யும் வகையில், அத்திட்டத்துக்கான விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலித்து அனுமதி வழங்க பரிந்துரைக்க வேண்டுமென கடலோர ஒழுங்குமுறை ஆணையத்துக்கு ஐஆா்இஎல் நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு அதிமுக, பாமக, அமமுக, நாம் தமிழா் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தாரகை கத்பட், பிரவீண் ஆகியோா் முதல்வா் விஜய்யை சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.
ஐஆா்இஎல் நிறுவனத்துக்கு வழங்கிய காலக்கெடு அரசாணையை உடனே தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி மனுவை முதல்வரிடம் அளித்தனா். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐஆா்இஎல் நிறுவனத்துக்கு அணுக் கனிமச் சுரங்கம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டுக்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு கடந்த ஜூன் 10-ஆம் தேதி உத்தரவிட்டது.
கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம் மற்றும் கொல்லங்கோடு உள்ளிட்ட கடலோரக் கிராமங்களில் இந்த சுரங்கத் திட்டம் அமைந்தால், அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம், உடல்நலம் மற்றும் கடலோரச் சூழல் ஆகியவை கடுமையாகப் பாதிக்கும். எனவே, இந்த கால நீட்டிப்பு அரசாணையை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அணுக்கனிம சுரங்கத் திட்டம்! என்ன பிரச்னை...? ஏன் எதிர்ப்பு...?

அணுக் கனிமச் சுரங்கம் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: கமல்ஹாசன்

அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கு வழிவகுக்கும் அரசாணையை உடனடியாக திரும்பப் பெறுக: இந்தியக் கம்யூனிஸ்ட்

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




