ஆரம்பமாகிறதா தூயசக்தியின் ஊழல் வேட்டை என்று தவெக அசின் மீது தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
ரூ. 5 முதல் 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்வதாக தவெக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஆரம்பமாகிறதா “தூயசக்தி”யின் ஊழல் வேட்டை?
தவெக ஆட்சியில் லஞ்சத்தின் அடிப்படையில்தான், அரசு வழக்கறிஞர்களின் நியமனங்கள் நடப்பதாக அந்தக் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அளித்த புகாரின் பரபரப்பு அடங்கும் முன்னரே, அரசு சார்பில் நடத்தப்பட்ட உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வில், 2006- ஆம் ஆண்டு பிறந்த ஒருவரும், பெயரே இல்லாத ஒருவரும் இடம் பெற்றிருப்பதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
அரசு வேலைகளை தங்கள் விருப்பத்துக்கு ஆட்டிப் படைக்கும் ஆளும் அரசின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது. “நாங்களும் ஊழல் செய்ய மாட்டோம், செய்பவர்களையும் விட மாட்டோம்” என்று வசனம் பேசிய விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றதில் இருந்து, தவெகவினரின் மாமூல் அராஜகம், டெண்டர் விடுவதில் முறைகேடு, உதவிப்பேராசிரியர் தேர்வில் குளறுபடிகள், அரசு வழக்கறிஞர்களின் நியமனத்தில் ஊழல், வேண்டியவருக்கு அரசு பதவிகள் கொடுப்பது என எங்கு திரும்பினாலும் ஊழல்களும் முறைகேடுகளும் மட்டும் தான் கொடி கட்டிப் பறக்கின்றன.
அரசு வேலையை நம்பி பல கனவுகளுடன் காத்துக்கிடக்கும் பட்டதாரிகளின் நம்பிக்கைகள் இப்படி சுக்குநூறாக உடைவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, முதல்வர் விஜய் தனது ஆட்சியில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை உடனடியாக விசாரிக்க வேண்டும். அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு வேலைகளை விலை பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்பி வாக்களித்த இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
à®à®°à®®à¯à®ªà®®à®¾à®à®¿à®±à®¤à®¾ âதà¯à®¯à®à®à¯à®¤à®¿âயின௠à®à®´à®²à¯ வà¯à®à¯à®à¯?
— Nainar Nagenthran (@NainarBJP) July 3, 2026
தவà¯à® à®à®à¯à®à®¿à®¯à®¿à®²à¯ லà®à¯à®à®¤à¯à®¤à®¿à®©à¯ à®à®à®¿à®ªà¯à®ªà®à¯à®¯à®¿à®²à¯ தானà¯, à®à®°à®à¯ வழà®à¯à®à®±à®¿à®à®°à¯à®à®³à®¿à®©à¯ நியமனà®à¯à®à®³à¯ நà®à®ªà¯à®ªà®¤à®¾à® à®à®¨à¯à®¤à®à¯ à®à®à¯à®à®¿à®¯à¯ à®à¯à®°à¯à®¨à¯à®¤ வழà®à¯à®à®±à®¿à®à®°à¯ à®à®³à®¿à®¤à¯à®¤ பà¯à®à®¾à®°à®¿à®©à¯ பரபரபà¯à®ªà¯ à®à®à®à¯à®à¯à®®à¯ à®®à¯à®©à¯à®©à®°à¯, à®à®°à®à¯ à®à®¾à®°à¯à®ªà®¿à®²à¯ நà®à®¤à¯à®¤à®ªà¯à®ªà®à¯à® à®à®¤à®µà®¿à®ªà¯à®ªà¯à®°à®¾à®à®¿à®°à®¿à®¯à®°à¯à®à®³à¯à®à¯à®à®¾à®© தà¯à®°à¯à®µà®¿à®²à¯, 2006-à®à®²à¯â¦
Summary
Tamil Nadu BJP State President Nainar Nagendran has questioned the TVK government, asking if a "corruption hunt" by a "pure force" is beginning.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக ஆட்சியில் இப்போதுதான் ஊழல் ஆரம்பித்துள்ளது: நயினாா் நாகேந்திரன்

குதிரை பேரம் நடக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை - நயினார் நாகேந்திரன் | BJP | TVK

ரூ. 4 கோடி பணம் பறிமுதல்! சென்னை நீதிமன்றத்தில் ஆஜரான பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
தமிழக காவலர்களின் பாதுகாப்புக்கு பிற மாநில காவல்துறையை நாட வேண்டும்போல: பாஜக
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




