ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தவெக தோழமை கட்சி ஆலோசனை நிறைவு! கூட்டத்தில் பேசியது என்ன?

தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது குறித்து...

 TVK's consultation with alliance parties concludes

தவெக தோழமைக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் முதல்வர் விஜய் - DNS

Published On :1 ஜூலை 2026, 9:53 pm IST

தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் கோவளத்தில் இன்று (ஜூலை 1) நடைபெற்றது.

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தந்த தோழமை கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிக்கவும் இக்கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தோழமை கட்சித் தலைவர்களை தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

இவர்கள் அழைப்பின்பேரில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகள் பங்கேற்றன.

 ஆலோசனைக் கூட்டத்தில் தவெக தோழமை கட்சித் தலைவர்கள்

ஆலோசனைக் கூட்டத்தில் தவெக தோழமை கட்சித் தலைவர்கள் - DNS

இக்கூட்டத்தில் தவெக அரசுக்கு தோழமை கட்சிகள் சார்பில் முதலில் நன்றி தெரிவிக்கப்பட்டது. பின்னர் தோழமை கட்சிகளுக்கு தவெக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் கூட்டணியாக செயல்பட வேண்டிய முதல் கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களுடன் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் ஆலோசனைக் கூட்டம் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும் கூறினார்.

மேலும், குறைந்தபட்ச செயல்திட்டம் பற்றி கூட்டத்தில் பேசியுள்ளதாகவும் தோழமை கட்சிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல 3 விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாகவும் குறிப்பிட்டார்.

Summary

TVK's consultation with alliance parties concludes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.