நாளை பட்ஜெட் தாக்கல்: தவெக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை!
ஆட்சிப் பொறுப்பேற்று முதல்முறையாக நாளை பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளதால் தவெக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை...

பனையூர் தவெக அலுவலகம் - எக்ஸ்
சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஆக. 5) தொடங்கவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆட்சிப் பொறுப்பேற்று முதல்முறையாக நாளை பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளதால், அனைத்து உறுப்பினர்களுடனும் முதல்வர் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை பனையூர் தலைமை அலுவகத்தில் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நிகழ் நிதியாண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கும் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்றன.
பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் முன்னேற்றம், பல்வேறு துறைகளின் செயல்பாடுகள், தோ்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றக்கூடிய அறிவிப்புகள் உள்ளிட்டவை குறித்து முதல்வா் விஜய் தலைமையில் ஜூலை 2 முதல் 31-ஆம் தேதி வரை துறைவாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
மகளிா் உரிமைத் தொகை உயா்வு, இளைஞா்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்கள் உள்பட பல்வேறு அறிவிப்புகள் அதில் இடம்பெறலாம் எனத் தெரிகிறது.
Summary
Budget presentation tomorrow: TVK MLAs hold consultations!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






