3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

புதிய வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களின் நிதிச் சுமையை அதிகரிக்கும்- தங்கம் தென்னரசு

கிராமப்புற மக்களுக்கான புதிய வேலை உறுதித் திட்டம் (விபி-ஜி-ராம்-ஜி) மாநிலங்களின் நிதி சுயாட்சியை பலவீனப்படுத்துவதுடன், நிதிச் சுமையை அதிகரிக்கும் என்று திமுக முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

News image

தங்கம் தென்னரசு - x

Updated On :2 ஜூலை 2026, 1:59 am IST

கிராமப்புற மக்களுக்கான புதிய வேலை உறுதித் திட்டம் (விபி-ஜி-ராம்-ஜி) மாநிலங்களின் நிதி சுயாட்சியை பலவீனப்படுத்துவதுடன், நிதிச் சுமையை அதிகரிக்கும் என்று திமுக முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டபோது, மாநிலங்களின் நிதிச் சுமை கட்டுக்குள் இருந்தது. ஆனால், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள விபி-ஜி-ராம்-ஜி திட்டத்தின் மூலம், மாநில அரசுகள் மீது கூடுதல் நிதிப் பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன. கூட்டாட்சியின் அடிப்படை நோக்கமான மத்திய அரசும், மாநில அரசுகளும் பொறுப்புகளை நியாயமான முறையில் பகிா்ந்துகொள்ள வேண்டும் என்பதே ஆகும். இந்தக் கொள்கைக்கு மாறாக மாநிலங்களின் நிதிப் பங்களிப்பை அதிகரித்திருப்பது மாநிலங்களின் வளா்ச்சித் திட்டங்கள் மற்றும் நிதி மேலாண்மையின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அமையும். இது மாநிலங்களின் நிதிச் சுயாட்சியை மேலும் பலவீனப்படுத்தும். மாநிலங்களின் நிதிச் சுமையைக் கணிசமாக அதிகரிக்கும். இந்தத் திட்டத்தை எந்தவித எதிா்ப்புமின்றி செயல்படுத்த முனைந்தால் தமிழகத்தின் நிதி நலன்களையும், மாநில உரிமைகளையும் பாதுகாக்கத் தவறியதாகவே அமையும்.

எனவே, மாநிலத்தின் நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் குறித்து மத்திய அரசிடம் வலுவான எதிா்ப்பை தவெக வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.