ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

125 நாள் வேலை உறுதித் திட்டத்தை தமிழகம் செயல்படுத்துமா? - அன்புமணி கேள்வி

125 நாள்கள் வேலை உறுதித் திட்டத்தின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து அந்தத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுமா? என்பதை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியிருப்பது தொடர்பாக...

Will Tamil Nadu implement the 125-day employment guarantee scheme?

125 நாள் வேலை உறுதித் திட்டத்தை தமிழகம் செயல்படுத்துமா? - pmk leader anbumani

Published On :28 ஜூன் 2026, 6:28 pm IST

125 நாள்கள் வேலை உறுதித் திட்டத்தின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து அந்தத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுமா? என்பதை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். திட்டத்தை செயல்படுத்துவதில்லை என முடிவு செய்தால், தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப் பட்டவாறு, தமிழ்நாட்டு மக்களுக்கு ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை வழங்குவதற்கான மாற்றுத் திட்டம் என்ன? என்பதையும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியா முழுவதும் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாள்கள் வேலை வழங்குவதற்கான திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலக்கெடு நெருங்கியுள்ள நிலையில், இதுவரை 19 மாநிலங்கள் மட்டுமே இதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளன. தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை செயல்படுத்துமா? என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், தமிழ்நாட்டில் இந்த திட்டப்படி வேலை வழங்கப்படுமா? என்ற வினா எழுந்துள்ளது.

கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை வழங்குவதற்கான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ள மத்திய அரசு, 125 நாள் வேலைத் திட்டம் என்ற புதியத் திட்டத்தை வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்தத் திட்டத்திற்காக இந்தியா முழுவதும் ரூ.95,692 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழகத்திற்கு ரூ.7,957.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு இன்னும் இரு நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மாநிலங்கள் உள்ளிட்ட 19 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இந்த திட்டத்தை செயல்படுத்த அறிவிக்கை வெளியிட்டுள்ளன.

தென்னிந்தியாவைப் பொருத்தவரை ஆந்திரம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்தப்போவதாக அறிவித்திருக்கின்றன. காங்கிரஸ் ஆளும் தெலங்கான, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதா அல்லது இந்த திட்டத்தின் அம்சங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதா? என்பது குறித்து கலந்தாய்வு நடத்தி வருகின்றன. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் பட்சத்தில், மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான மாநிக அரசின் சார்பில் தனி வேலைவாய்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தவும் தெலங்கானம் மாநிலம் முடிவு செய்துள்ளது.

ஆனால், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு இன்னும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தில் மாநில அரசுகளின் பங்கு 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்; அதுமட்டுமின்றி எந்த வகையான பணிகளை மேற்கொள்வது என்பதைத் தீர்மானிப்பதில் மத்திய அரசுக்கு தான் அதிக அதிகாரம் உண்டு என்பதால், இந்த திட்டம் மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாக எதிர்க்கட்சிகளால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதா, அதை எதிர்த்து அரசியல் மற்றும் சட்டரீதியாக எதிர்ப்பு தெரிவிப்பதா? என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு. அரசின் நிலைப்பாடு எதுவாயினும் அதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

125 நாள் வேலை உறுதித் திட்டத்திற்காக தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ.7,957.57 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு அதன் பங்காக 40% தொகை ரூ.5305.04 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதன்மூலம் இந்தத் திட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக ரூ.13,262.61 கோடி கிடைக்கும். தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒரு நாள் வேலை வழங்க ரூ.479.49 செலவாகும் நிலையில், தமிழகத்திற்கான மொத்த நிதியைக் கொண்டு 27.68 கோடி மனித வேலைநாள்களை ஏற்படுத்த முடியும். தமிழ்நாட்டில் 69.76 லட்சம் குடும்பங்கள் தொடர்ந்து வேலை செய்து வரும் நிலையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 39.69 நாள்கள் வேலை வழங்க முடியும். 2021- 22 முதல் 2024 - 25 ஆம் ஆண்டு வரை சராசரியாக முறையே 50.95, 50.96, 59.44, 46.86 நாள்கள் வேலை வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தினால், நடப்பாண்டில் அதை விட குறைவாகவே வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மாராக, இந்தத் திட்டத்தை அறிவிக்கை செய்யாவிட்டால், தமிழ்நாட்டில் புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1791.33 கோடியில் செலவிடப்பட்ட ரூ.1350.43 கோடி போக மீதமுள்ள ரூ. 440.90 கோடியை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்தத் தொகையைக் கொண்டு சராசரியாக 1.30 நாள்கள் மட்டுமே வேலை வழங்க முடியும். அதன்பின் தமிழக அரசு அதன் சொந்த நிதியைக் கொண்டு தான் தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டியிருக்கும்.

எனவே, 125 நாள்கள் வேலை உறுதித் திட்டத்தின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து அந்தத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுமா? என்பதை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். திட்டத்தை செயல்படுத்துவதில்லை என முடிவு செய்தால், த.வெ.கவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப் பட்டவாறு, தமிழ்நாட்டு மக்களுக்கு ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை வழங்குவதற்கான மாற்றுத் திட்டம் என்ன? என்பதையும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Summary

Will Tamil Nadu implement the 125-day employment guarantee scheme? says Anbumani asks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.