

பராமரிப்புப் பணிகள் காரணமாக மதுரை வழியாக இயக்கப்படும் 3 விரைவு ரயில்கள் பிப்ரவரி மாதத்தில் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில் வழித்தடங்களில் பிப்ரவரி மாதத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதன்காரணமாக நாகா்கோவிலிருந்து பிப்.5, 8, 12, 15, 19, 22, 26 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு மும்பை செல்லும் விரைவு ரயில் (எண்: 16352), கன்னியாகுமரியிலிருந்து பிப்.7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 5.50 மணிக்கு ஹொரா செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 12666), கன்னியாகுமரியிலிருந்து பிப்.6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு ஹைதராபாத் செல்லும் ரயில் (எண்: 07229) மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் வழித்தடத்துக்குப் பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்கள் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்

மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து

45 நாள்களுக்கு..! சென்னை எழும்பூரின் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை, சேலம், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து

தாம்பரம்-விழுப்புரம் மெமு ரயில் திண்டிவனத்துடன் நிறுத்தம்
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

