/

ராணிப்பேட்டையில் குடியரசு நாள் விழா கொண்டாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத் தலைநகரில் குடியரசு நாள் விழா திங்கள்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

News image
தேசியக்கொடி ஏற்றினார் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா.
Updated On :26 ஜனவரி 2026, 5:34 am

இணையதளச் செய்திப் பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டத் தலைநகரில் குடியரசு நாள் விழா திங்கள்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி திடலில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட எஸ்.பி.அய்மன் ஜமால் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினார்.

Story image

காவல் துறை, தேசிய மாணவா் படை உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியா் ஏற்றாா். பின்னா் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய காவலா்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை அவர் வழங்கினாா். மேலும், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்தும் கௌரவித்தாா்.

Story image

விழாவில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ராஜி, வட்டாட்சியா் ஆனந்தன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனர்.

summary

Republic Day was celebrated with great fanfare at the Ranipet District Sports Ground on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.