ஜனநாயகப் பாதையில் சாமானியர்களுக்கும் அதிகாரமளித்த எம்.ஜி.ஆருக்கு புகழ் வணக்கம்: விஜய்!
ஜனநாயகப் பாதையில் சாமானியர்களுக்கும் அதிகாரமளித்த எம்.ஜி.ஆருக்கு புகழ் வணக்கம் என தவெக தலைவர் விஜய் புகழாரம்.


ஜனநாயகப் பாதையில் சாமானியர்களுக்கும் அதிகாரமளித்த எம்.ஜி.ஆருக்கு புகழ் வணக்கம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் பிறந்த நாள் இன்று (ஜன. 17) கொண்டாப்படுகிறது. அதையொட்டி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் தலைவர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் எம்.ஜி.ஆர். புகைப்படங்கள், உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “தமிழக மக்களின் நெஞ்சங்களில் பொன்மனச் செம்மலாக, ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக, பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜனநாயகப் பாதையில், சாமானியர்களுக்கும் அதிகாரமளித்து, மக்களாட்சி செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...