/

பொங்கல் திருநாள்: ரூ. 900 கோடியை நெருங்கும் மது விற்பனை?

பொங்கல் திருநாளையொட்டி, தமிழ்நாட்டில் 2 நாள்களில் மட்டும் ரூ. 518 கோடிக்கு மது விற்பனை

News image
மது விற்பனை- கோப்புப் படம்
Updated On :17 ஜனவரி 2026, 1:22 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் திருநாளையொட்டி, தமிழகத்தில் மது விற்பனை ரூ. 900 கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் திருநாளையொட்டி, தமிழகத்தில் ஜன. 14, 15 ஆகிய தேதிகளில் மட்டும் ரூ. 518 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 4 நாள் கொண்டாட்டத்தின் முடிவில் ஒட்டுமொத்தமாக ரூ. 900 கோடியை எட்டும் என்று புள்ளிவிவரங்களின்படி கணிக்கப்பட்டுள்ளது.

இருநாள்களில் சென்னையில் ரூ. 98.75 கோடியும், மதுரையில் ரூ. 95.87 கோடியும். திருச்சியில் ரூ. 85.13 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.

கடந்தாண்டு பொங்கல் திருநாளின்போது, 4 நாள்களில் ரூ. 725 கோடியாக இருந்த நிலையில், இந்தாண்டு இரு நாள்களிலேயே ரூ. 518 கோடியை எட்டியது.

தமிழ்நாட்டின் பொருளாதாரம் 11.9 சதவிகிதம் வளர்ச்சியடைந்த நிலையில், அதனைவிட மது விற்பனை (14.10%) அதிகரித்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

summary

Pongal festival: Will liquor sales approach Rs. 900 crore?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.