பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஒரு கிலோ ரூ. 3 லட்சத்தைக் கடந்த வெள்ளி! வரலாறு காணாத புதிய உச்சம்!!

தங்கம் - வெள்ளி விலை இன்றைய நிலவரம் பற்றி...

News image
Updated On :14 ஜனவரி 2026, 6:56 am

இணையதளச் செய்திப் பிரிவு

Gold and silver price today: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வெள்ளி விலை வரலாற்றில் இல்லாத உச்சமாக கிலோவுக்கு ரூ15,000 உயர்ந்து முதல் முறையாக ரூ. 3 லட்சத்தைக் கடந்தது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,280-க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் 1,06,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்துடன் போட்டிபோடும் வெள்ளி விலை நேற்றைப் போலவே இன்றும் ஒரு கிலோவுக்கு ரூ. 15,000 உயர்ந்துள்ளது.

இன்று (ஜன.14) ஒரேநாளில் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 307-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.15,000-ம் உயர்ந்து ரூ.3,07,000 என்ற வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் வெள்ளி விலை ரூ.30,000 உயர்ந்திருக்கிறது.

உலகளாவிய வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம், அமெரிக்காவின் வரிவிதிப்பு, ஈரான் போர்ப்பதற்றம் உள்ளிட்டவற்றால் தங்கம் வெள்ளி ஆகியவற்றின் மீதான முதலீடு அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் மற்றும் மக்கள் மீண்டும் கலக்கமடைந்துள்ளனர்.

மேலும், மார்கழி மாதம் முடிந்து தை மாதப் பிறப்பையொட்டி சுப விசேஷங்களால் மீண்டும் தங்கம் விற்பனை அதிகரிக்கக் கூடும் என்றும், இதனால் தொடர்ந்து விலையேற்றம் இருக்கலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

summary

In Chennai, the price of gold jewellery has increased by Rs. 880 per sovereign, reaching a new all-time high

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.