/

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு பனிமூட்டம்!

தமிழகத்தில் பனிமூட்டம் நிலவுவது பற்றி..

News image
தமிழகத்தில் லேசான பனிமூட்டம் நிலவும்
Updated On :14 ஜனவரி 2026, 8:45 am

இணையதளச் செய்திப் பிரிவு

பனிமூட்டம்: தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும், நாளையும் லேசான பனிமூட்டம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

ஜன. 14, 15ல் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

ஜன. 16 முதல் 18 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

குறைந்தபட்ச வெப்பநிலை

14-01-2026 முதல் 16-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பாக இருக்கக்கூடும்.

குறைந்தபட்ச வெப்பநிலையில் மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் சற்று குறைவாக இருக்கக்கூடும்.

சென்னையை பொருத்தவரை

இன்று (14-01-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்தியஸை ஒட்டியம் குறைந்தபட்க வெப்பநிலை. 21-22°ால்தியவை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.