/

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

சென்னையில் இருந்து இயக்கப்படும் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் பற்றி...

News image
கோப்புப்படம்
Updated On :9 ஜனவரி 2026, 3:01 am

இணையதளச் செய்திப் பிரிவு

சிறப்புப் பேருந்துகள்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புப் பேருந்துகள் இன்றுமுதல் இயக்கப்படவுள்ளன.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, வரும் 09/01/2026 முதல் 14/01/2026 வரையில், சென்னையிலிருந்து நாள்தோறும் வழக்கமாக இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 10,245 சிறப்புப் பேருந்துகள் என ஆறு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 22,797 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாள்களுக்கு 11,290 சிறப்பு பேருந்துகள் ஆக மொத்தம் 34,087 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் திருநாள் - சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னையிலிருந்து பின்வரும் பேருந்து நிலையங்களிலிருந்து  பேருந்துகள்  இயக்கப்படும்  (09/01/2026 முதல் 14/01/2026 வரை)

1. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்(KCBT), கிளாம்பாக்கம் Moffussll பேருந்து நிலையம்

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையம் (MTC)

வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

2. புரட்சித்தலைவர் டாக்டர்  எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு

கிழக்கு கடற்கரை (ECR), காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

3. மாதவரம் புதிய பேருந்து நிலையம்

பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படும்.

முன்பதிவு மையங்கள் செயல்படும் இடங்கள்

09/01/2026 முதல் 14/01/2026  வரை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை முன்பதிவு செய்யலாம்.

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் 10 முன்பதிவு மையங்களும் சென்னை கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக 24x7 கட்டுப்பாட்டு அறை

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை (24x7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (Toll Free Number) மற்றும் 044-24749002,  044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.  இதுமட்டுமின்றி, பயணிகளின் நலன் கருதி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்படும்.  

மேலும்,  பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக பல்வேறு  இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க முன்பதிவு வசதியினை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள்

பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.  பேருந்து நிலையத்திலிருந்து  மேற்கூறிய இரண்டு பேருந்து நிலையங்களுக்கும் செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.