வடபழனி - பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் வடபழனி - பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் சேவைக்கு பாதுகாப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு, அனுமதி அளிக்கப்பட்டது.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மதுகா் சௌத்ரியின் 4 நாள்கள் ஆய்வையடுத்து, அனுமதி வ்ழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளத்தின் தரம், ரயில் பெட்டிகளின் வசதி, பாதுகாப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
முதற்கட்டமாக, பூந்தமல்லி - வடபழனி இடையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ சேவை இயக்கப்படுகிறது.
சென்னையில் முதற்கட்டமாக சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் மீனம்பாக்கம் விமானம் நிலையம் வரை இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கம் இரு வழிகளில் இயக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் 4 -ஆவது வழித்தடமாக மெரீனா கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை தண்டவாளம், ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு, அனுமதியும் பெறப்பட்டது.
அந்த வழித்தடத்தில் வடபழனி முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 14. 64 கி.மீ. தொலைவுக்கான தண்டவாளப் பணிகள், ரயில் நிலையப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
Summary
Permission granted for Poonamallee - Vadapalani Metro Rail service
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பயணிகள் பாதுகாப்புக்காக மாற்றம் பெறும் நீல வழித்தட மெட்ரோ ரயில்கள்!

சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்

போரூா் - பூந்தமல்லி மெட்ரோ பாலத்தின் அதிா்வு: சிஎஸ்ஐஆா்-எஸ்இஆா்சி நிகழ் நேரக் கண்காணிப்பு

வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில்: 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



