வெல்லமண்டி என். நடராஜன் அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகிய இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டதையடுத்து அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் இருந்தன. ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை இபிஎஸ் தரப்பு நீக்கியபோது ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளரான வெல்லமண்டி என். நடராஜனும் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, அவர் ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் திடீரென திமுகவில் ஐக்கியமானார். இன்று (பிப். 27) தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலினைச் சந்தித்து அவர் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.
இதனையடுத்து, அவரது சர்பு நிர்வாகிகள் குழப்பத்தில் இருந்த நிலையில், வெல்லமண்டி என். நடராஜன் அதிமுகவில் மீண்டும் இணைந்தார். அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமியைச் சந்தித்து அவர் தன்னை மீண்டும் அக்கட்சியில் இன்று (பிப். 27) இணைத்துக்கொண்டார்.
அதிமுக-வில் மாவட்டச் செயலராக 5 முறையும், அவைத் தலைவராக 16 ஆண்டுகளும் இருந்தவர் வெல்லமண்டி என். நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Former ADMK expelled leader Vellamandi N Natarajan re unites with ADMK today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எம். எஸ். விஸ்வநாதன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 54

அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!

வெல்லமண்டி நடராஜனுக்கு அதிமுகவில் புதிய பதவி

திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது மிகப்பெரிய தவறு: வெல்லமண்டி என். நடராஜன்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


