மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடம்பெறும்! - ஞானேஷ்குமார்

சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பேட்டி

News image

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்

Updated On :27 பிப்ரவரி 2026, 7:29 am

வரும் தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்களும் இடம்பெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்தார்.

சென்னை தனியார் ஹோட்டலில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களுடன் பேசினார்.

"தமிழ்நாட்டில் 5.67 வாக்காளர்கள் உள்ளனர். 18 - 19 வயதுடைய 12.5 லட்சம் பேரும் 20 -29 வயதுடைய 1.05 லட்சம் பேரும் உள்ளனர்.

தமிழகத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்(எஸ்ஐஆர்) பணிகள் நாட்டுக்கே முன்னுதாரணமாக உள்ளன. எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி. ஜனநாயகத்தைக் காப்பதில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

தமிழ்நாட்டில் 75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. வாக்காளர் பட்டியல் என்பது நேர்மையான தேர்தலின் அடிப்படை

தமிழகத்தில் வரும் பேரவைத் தேர்தலில் தேர்தல் அதிகாரிகள் அச்சமின்றி செயல்படலாம். சமூக ஊடங்கங்களில் பொய் செய்திகள் கண்காணிக்கப்படும்.

வாக்குபதிவின்போது 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் பதிவேற்றம் செய்யப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும். சாமானிய மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் மக்கள் வாக்களிக்கும் முறை எளிமையாக்கப்படும்.

வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

தற்போது வரை எஸ்ஐஆர் பணிகளில் 267 புகார்கள் மட்டுமே வந்துள்ளன" என்று கூறினார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்!

செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,

"தகுதியான ஒருவர் எப்போது வேண்டுமானாலும் வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

இப்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான நிலையிலும், அதில் பெயர் இடம்பெறவில்லை என்றால் தகுதியுள்ள ஒருவர் படிவம் 6 மூலமாக தங்கள் பெயரைச் சேர்க்கலாம். படிவம் 7 மூலமாக பெயர் நீக்கம் செய்யலாம், படிவம் 8 மூலமாக இட மாற்றத்திற்கு, தொகுதி மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம். வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 10 நாள்களுக்கு முன்வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நீங்கள் விண்ணப்பித்து 7 முதல் 10 நாள்களுக்குள் சரிசெய்யப்படும்" என்றார்.

Summary

Tamilnadu assembly election: Chief Election Commissioner Gyanesh Kumar press meet in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.