ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 12 பேருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம், அவா்கள் அனைவரையும் வரும் மாா்ச் 6-ஆம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த உத்தரவிட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் பிரபல ரௌடி நாகேந்திரன் அவரது மகன் அஸ்வத்தாமன் உள்பட 27 போ் கைது செய்யப்பட்டனா். இருவா் தலைமறைவாக உள்ளனா். வழக்கின் முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தாா்.
இந்த வழக்கை உயா்நீதிமன்ற தனி நீதிபதி சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டாா். இதை எதிா்த்து தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதனிடையே இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 14 பேருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் பிணை வழங்கியது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி காவல் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே கோரிக்கையுடன், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்குகள் நீதிபதி கே.ராஜசேகா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ள 14 பேரில், அஞ்சலை மற்றும் ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடி தவிா்த்த 12 பேரின் பிணை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
பிணை ரத்து செய்யப்பட்ட அஸ்வத்தாமன், ஹரிஹரன், பிரதீப் உள்ளிட்ட 12 பேரையும் வரும் மாா்ச் 6-ஆம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.
Summary
Armstrong murder case: All 12 people released on bail in the have been ordered to surrender
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: கைதானவரின் பிணை ரத்து

சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து! திருமாவளவன்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 12 பேர் ஜாமீன் ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


