உயிரே போனாலும் தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்போம் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மதுரை உத்தங்குடியில் இன்று (பிப். 21) நடைபெறும் தெற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ. பெரியசாமி, பி. மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மகளிர் உரிமைத் தொகையை மத்திய அரசு நிறுத்தப் பார்த்தது. ஆனால், காலையிலேயே ரூ. 5,000 என்ற ஆச்சரியம் கொடுத்ததுமே மத்திய அரசுக்குப் பயந்து மக்கள் உடனே வங்கிக்குச் சென்று தங்கள் பணத்தை எடுத்துக் கொண்டனர்.
மக்களுக்காக கொடுத்தால் அது திமுக. ஆனால், மக்களிடம் இருந்து எடுத்துக் கொண்டால் அது மத்திய அரசு. நமது மாநிலம் வரலாறு காணாத வளர்ச்சி அடைத்திருக்கிறது. அது எதிரிகளின் கண்ணை உறுத்துகிறது. வாக்காளர்களை கனிவாக பணிவாக நடத்த வேண்டும். மக்கள்தான் எஜமானர்கள்; நாம் சேவகர்கள்.
பழனிசாமி போல நாங்கள் கோழைகள் அல்ல; ஆட்சியல்ல, பதவியல்ல.. உயிரே போனாலும் கவலைப்படாமல் தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்போம். வழக்குப் போடுவியா போடு... நாங்கள் பார்க்காத மிசாவா? தடாவா?” எனப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்!

தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் ஒரே கொள்கை இருமொழிக் கொள்கையே! - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



