மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க எம்.பி.க்கள் அனைவரையும் தில்லி செல்ல உத்தரவிட்டுள்ளார் மு.க. ஸ்டாலின்.

News image

தருமபுரி பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் - யூடியூப் / M.K. Stalin

Updated On :15 ஏப்ரல் 2026, 1:39 pm

தேர்தலை விட சுயமரியாதையே முக்கியம் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 15) தெரிவித்தார்.

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க உறுப்பினர்கள் அனைவரையும் தில்லி செல்ல உத்தரவிட்டுள்ளதாகவும், இப்போது உரிமைக்குரல் எழுப்பவில்லை என்றால், எப்போதுமே குரல் எழுப்ப முடியாது எனவும் குறிப்பிட்டார்.

தருமபுரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 15) பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

''தருமபுரியின் வளர்ச்சிக்கு மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை தொடரச் செய்ய வேண்டும். தருமபுரியில் கல்லூரி மாணவிகளை எரித்துக்கொண்றது அதிமுக ஆட்சியில்தான்.

திராவிட மாடல் அரசு இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது. அனைவரும் வளர வேண்டும் என்பதே திராவிட மாடலில் வெற்றி. கொள்கையின் அடிப்படையில் அமைந்த கூட்டணி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி.

துரோகிகளின் கூடாரம் அதிமுக. சொந்த தந்தைக்கே துரோகம் செய்துவிட்டு அதிகாரத்தைப் பிடிக்க நினைக்கிறார் ஒருவர் (அன்புமணி). அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? ஊழல் வழக்குகளுக்கு பயந்து பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துள்ளார்.

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக மக்கள் அனைவரும் முழக்கமிட வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேர்தல் பணியை பார்ப்பதை விட்டுவிட்டு நாடாளுமன்றத்திற்கு நமது உறுப்பினர்கள் செல்லவுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தில்லி செல்ல உத்தரவிட்டுள்ளேன். தேர்தல் பிறகுதான், உரிமையை காப்பதுதான் முக்கியம்.

நாடாளுமன்றத்தில் நாளை நாம் குரல் எழுப்பவில்லை என்றால், என்றுமே குரல் கொடுக்க முடியாது. தில்லி அடங்கும் வரை நாம் அடிக்க வேண்டும். தொகுதி மறுவரையிலாவது தமிழ்நாட்டின் உரிமைக்காக எடப்பாடி பழனிசாமி நிற்க வேண்டும்.

தொகுதி மறுவரையறை என்பது தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் மத்திய அரசின் முயற்சி. மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கு தொகுதி மறுவரையறை பெயரில் தண்டனையா? தொகுதி மறுவரையறையை எதிர்த்து கருப்புக் கொடி போராட்டத்தில் அனைவரும் ஈடுபட வேண்டும்'' என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

Summary

TN Election 2024 Elections are not important self-respect is paramount: M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.