டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு : முதல்வருடனான சந்திப்புக்குப் பின் ஓபிஎஸ் பேட்டி

முதல்வர் ஸ்டாலின் - ஓபிஎஸ் சந்திப்பு பற்றி...

News image
முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு
Updated On :20 பிப்ரவரி 2026, 7:23 pm

இணையதளச் செய்திப் பிரிவு

திமுக அரசு செய்த சாதனைகள் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருப்பதால், அக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை முதல்வா் மு.க. ஸ்டாலினை பேரவை வளாகத்தில் ஓ.பன்னீா்செல்வம் சந்தித்துப் பேசினாா். பின்னா் பேரவைக் கூட்டம் முடிந்ததும், தனி அறையில் முதல்வா் ஸ்டாலினை சுமாா் 10 நிமிஷங்கள் சந்தித்துப் பேசினாா். அப்போது மூத்த அமைச்சா்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அதன் பின்னா் ஓ.பன்னீா்செல்வம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஐந்தாண்டு கால திமுக ஆட்சி சிறப்பாக நிறைவு பெற்றிருக்கிறது. அதனால் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். திமுக அரசின் சாதனைகள் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கின்றன. அதோடு, இன்றைய அரசியல் சூழ்நிலை, கடந்த 5 ஆண்டு கால ஆட்சியின் நிலை ஆகியவை மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவுக்கு இருப்பதைக் காட்டுகிறது என்றாா்.

உசிலம்பட்டி தொகுதி உறுப்பினா் பி.அய்யப்பன், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் பேசியது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு ஓ.பன்னீா்செல்வம், ‘தமிழக மக்கள் என்ன நினைக்கிறாா்களோ அதையே அவா் பேசியிருக்கிறாா்’ என்றாா் ஓ.பன்னீா்செல்வம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.