/

வேலூரில் விஜய் பிரசாரம்! பாதுகாப்பில் கவனம் செலுத்தும் தவெக!

வேலூரில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்டத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடு.

News image
தவெக தலைவர் விஜய்- PTI
Updated On :19 பிப்ரவரி 2026, 12:58 pm

இணையதளச் செய்திப் பிரிவு

வேலூரில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்டத்துக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் வேலூர் மாவட்டம், அகரம்சேரியில் வரும் திங்கள்கிழமை (பிப்.23 நடைபெற உள்ளது.

சேலத்தைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டம், அகரம்சேரியில் நடைபெற உள்ளது. இதையொட்டி, காவல் துறையின் அனுமதி கோரி அக்கட்சியின் மாவட்ட செயலர் வேல்முருகன் தலைமையில் தவெக நிர்வாகிகள் கடந்த வாரம் மனு அளித்திருந்தனர்.

இந்த நிலையில், விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டத்துக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், பாதுகாப்பு தொடர்பான 20 நிபந்தனைகள் அடங்கிய விண்ணப்பத்தை தவெக நிர்வாகிகளிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். யு. சிவராமன் வழங்கினார்.

அதேசமயம், அகரம்சேரியில் 33 ஏக்கர் பரப்பளவு நிலத்தை தயார் செய்து, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கடந்த வாரம் சேலத்தில் நடைபெற்ற விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற வடமாநில இளைஞர் சுராஜ், வெய்யில் காரணமாக பலியானதாகக் கூறப்படும் நிலையில், வேலுரில் நடைபெறவுள்ள கூட்டத்துக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

வேலூரில் நடைபெறும் தவெக மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெறும் இடத்தில் பந்தல் போடப்படுகிறது. மேலும், அங்கு 5,000 நாற்காலிகள் போடவும் அதனுடன் தண்ணீர் பாட்டிலும் வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

பிப். 23-ஆம் தேதி நடைபெறும் விஜய் சந்திப்புக் கூட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி வெற்றிகரமாக நடத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தவெக தலைவர் விஜய், சென்னையில் இருந்து சாலை வழித்தடத்தில் வேலூருக்கு வரவுள்ள நிலையில், இளைஞர்கள் யாரும் அவரை வாகனத்தை பின்தொடர வேண்டாம் என்றும், கூட்டத்துக்கு வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

summary

Tvk administrators are making additional security arrangements for Vijay's campaign rally in Vellore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.