எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மீண்டும் திமுக ஆட்சிதான்! பேரவையில் செல்வப்பெருந்தகை பேச்சு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது பற்றி...

News image
செல்வப்பெருந்தகை- TNDIPR
Updated On :18 பிப்ரவரி 2026, 6:29 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக திமுக ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் இடையே சலசலப்பு நீடித்து வருகின்றது.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது செல்வப்பெருந்தகை பேசுகையில்,

”நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள். தொழிற்சாலைகள் நிறைந்த திருப்பெரும்புதூர் தொகுதியில் பல சாலைகள் பழுதடைந்துள்ளது. நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என்பது தமிழ்நாட்டு மக்களால் முடிவு செய்யப்பட்டது.

இருந்தபோதிலும், தேர்தலுக்கு முன்னதாக பழுதடைந்த சாலைகள் சரிசெய்யப்படுமா? எனக் கேட்க விரும்புகிறேன்” எனப் பேசினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, “செல்வப்பெருந்தகையின் கோரிக்கை நியாயமானவை. எந்தெந்த சாலைகள் என்று முறைப்படி கடிதம் அளித்தால் நடவடிக்கை எடுக்கிறோம். தேர்தல் தேதி அறிவித்துவிட்டால், அடுத்த நிதியாண்டில் செய்து கொடுக்கிறோம்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.