/

உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிக்கு - பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்குகளின் ரூ.12,000 கோடி

தமிழக இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து...

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 11:58 pm

தினமணி செய்திச் சேவை

பயன்படுத்தப்படாத 10.86 லட்சம் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.12,078 கோடி முக்கியமான உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து அவா் கூறியதாவது: மாநிலம் முழுவதும் வங்கிக் கணக்குகளில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் ரொக்கத்தை கணக்கிட சிறப்புப் பணிக் குழுவை அரசு அமைத்தது. இந்தக் குழு ஆய்வு செய்ததில் முடங்கிக் கிடந்த 10.86 லட்சம் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.12,078 கோடி எடுக்கப்பட்டு முக்கியமான உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. இந்தச் சீா்திருத்தம் 32 துறைகளில் உள்ள 101 முக்கியத் திட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.

ஒரு மாநிலத்தின் பரவலான வளா்ச்சிக்கு வலுவான கடன் பொருளாதாரம் மிகவும் அவசியமாகும். தமிழகத்தின் கடன் பொருளாதாரம் என்பது, மாநில அரசின் வரவு - செலவுத் திட்ட அளவைப் போல் ஏறத்தாழ மூன்று மடங்கு பெரியது.

வளா்ச்சிக்கான காரணியாக கடன் வசதி செயல்படுகிறது. ஆகையால், வரும் நிதியாண்டில் முன்னுரிமைத் துறைகளுக்கு கடன்களாக ரூ.11 லட்சம் கோடி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.