டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப். 20 வரை நடைபெறும்! - அப்பாவு

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிகழ்வுகள் பற்றி...

News image
பேரவைத் தலைவர் அப்பாவு.- கோப்புப் படம்
Updated On :17 பிப்ரவரி 2026, 10:34 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப். 20 வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026 - 27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று(பிப். 17) தாக்கல் செய்து உரையாற்றினார்.

தொடர்ந்து 2026 -27 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து பேசினார்.

பஜெட் தாக்கல் நிறைவு பெற்றதையடுத்து பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற பிப். 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள்(பிப். 18, 19) பட்ஜெட் மீது விவாதம் நடைபெறும் என்றும் பிப். 20 ஆம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை வழங்குவார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.