டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பேர் பயன்! - தங்கம் தென்னரசு

தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்...

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 5:05 am

இணையதளச் செய்திப் பிரிவு

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பேர் பயன் பெற்றுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

மருத்துவத் துறை தொடர்பாக பேசிய அவர்,

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். 2.55 கோடி பேர் முதல்முறை சேவைகளையும் 4.75 கோடி பேர் தொடர் சேவைகளையும் பெற்று வருகின்றனர்.

இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டம் 5 லட்சத்துக்கு அதிகமான உயிர்களை காப்பற்றியுள்ளது. இதற்கு இதுவரை ரூ. 493 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 1,206 மருத்துவ முகாம்கள் மூலமாக 17,82,687 பயனாளிகள் பலன்பெற்றுள்ளனர்.

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 6374 கோடி ரூபாய் வழங்கப்பட்டு 87,34,363 கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் மூலமாக 34,40,550 கோடி மகளிர் பயன்பெற்றுள்ளனர். ரூ. 4,042 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.