/

காரைக்கால் மீனவர்கள் 25 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :16 பிப்ரவரி 2026, 4:54 am

இணையதளச் செய்திப் பிரிவு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து அனுமதி சீட்டு பெற்று கடலுக்குச் மீன்பிடிக்க சென்ற 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

காரைநகர் கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 25 மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.

கைதான மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பிறகு மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

தமிழக, புதுச்சேரி மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவது தமிழக மீனவர்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்குமாறு அவர்களின் குடும்பத்தினரும் மீனவ அமைப்புகளும் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.

summary

25 Karaikal fishermen were arrested by the Sri Lankan Navy while fishing in the high seas in the Palk Strait on Monday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.