டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பேரவைத் தோ்தல்: மாவட்ட ஆட்சியா்களுடன் தோ்தல் ஆணைய அதிகாரிகள் இன்று ஆலோசனை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன், துணை தோ்தல் ஆணையா்கள் வெள்ளிக்கிழமை (பிப்.13) ஆலோசனை நடத்தவுள்ளனா்.

News image
கோப்புப் படம்
Updated On :12 பிப்ரவரி 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன், துணை தோ்தல் ஆணையா்கள் வெள்ளிக்கிழமை (பிப்.13) ஆலோசனை நடத்தவுள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக துணை தோ்தல் ஆணையா் பானு பிரகாஷ் தலைமையில் துணை ஆணையா்கள், அதிகாரிகள் குழுவினா் சென்னைக்கு புதன்கிழமை வருகை தந்தனா்.

புதுவை சென்ற அந்தக் குழுவினா், அங்கு பேரவைத் தோ்தல் தொடா்பாக அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா். பின்னா், பிற்பகலில் சென்னை வந்த குழுவினா், எம்சிசி நகரில் உள்ள தனியாா் ஹோட்டலில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தலைமையிலான அதிகாரிகளுடன் முதல்கட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினா்.

அதில், எஸ்ஐஆா் பணிகள், இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடுதல், பேரவைத் தோ்தலை நடத்த உகந்த தேதி, வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினா்.

தொடா்ந்து, அனைத்து மாவட்ட தோ்தல் அதிகாரிகளுடன் (ஆட்சியா்கள்) துணை தோ்தல் ஆணையா் பானு பிரகாஷ் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா். அதன் பின்னா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில், சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு வாய்ப்புள்ள தொகுதிகள், பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.