அரசுப் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு அடிப்படைக் கற்றல் ஆய்வு விரைவில் நடைபெறவுள்ள நிலையில், மாதிரி வினாத்தாள் மூலம் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் மூன்றாம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு அடிப்படை கற்றல் ஆய்வு(ஊா்ன்ய்க்ஹற்ண்ா்ய்ஹப் ப்ங்ஹழ்ய்ண்ய்ஞ் ள்ற்ன்க்ஹ்-ஊப்ள்) பிப்ரவரி அல்லது மாா்ச் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. இதுதொடா்பாக தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளுக்கான என்சிஇஆா்டி-யால் (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள்கள் கள அளவில் சோதனைகள் மேற்கொள்வதற்காக மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக எஸ்சிஆா்டிஇ (மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்த மாதிரி வினாத்தாள்களை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிவைத்து, மூன்றாம் வகுப்பு மாணவா்களுக்கு தேவையான பயிற்சிகளை ஆசிரியா்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுசாா்ந்து அனைத்து பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை அளிக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
டிரெண்டிங்

மாணவா்களின் கற்றல் திறனை பரிசோதிக்க உத்தரவு

போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் விடுவிக்க உத்தரவு

பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் ரூ.5 கோடியில் மாநில வள மையம்: அமைச்சா் அன்பில் மகேஸ் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

