டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாணவிகளுக்கு ரஜினிகாந்த் வசனத்தை மேற்கோள் காட்டிய முதல்வர் ஸ்டாலின்!

நடிகர் ரஜினிகாந்த் வசனத்தைச் சொல்லி மேற்கோள் காட்டிய முதல்வர்.

News image
முதல்வர் ஸ்டாலின்- படம்: DIPR
Updated On :10 பிப்ரவரி 2026, 6:54 am

இணையதளச் செய்திப் பிரிவு

மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு ரஜினிகாந்த் வசனத்தைச் சொல்லி முதல்வர் ஸ்டாலின் மேற்கோள் காட்டினார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் படையப்பா படத்தில் இடம்பெற்ற, ‘கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்கிறது எதுவும் நிலைக்காது’ என்ற வசனத்தை மாணவிகளுக்கு முதல்வர் மேற்கோள் காட்டினார்.

சென்னை, நுங்கம்பாக்கம், கல்லூரி சாலை, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு இன்று(பிப். 10) பாராட்டு விழா நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ”எம்சிசி பள்ளியின் பழைய மாணவனாக, நான் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரிக்கு(WCC) நான் வந்திருக்கிறேன், நமக்குள் நன்றி சொல்லிக் கொள்ள தேவையில்லை.

என்னைப் பொறுத்தவரை பெண்கள் என்றாலே அழகுதான். அப்படிப்பட்ட பெண்களுக்கு அறிவுதான் உண்மையான அழகு. படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உலகிலேயே அழகான அணிகலன்.

வெற்றிக்கு குறுக்கு வழி கிடையாது. கடினமாக உழைத்தால்தான் ஜெயிக்க முடியும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டயலாக் ஒன்னு வரும். கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்கிறது எதுவும் நிலைக்காது.

தமிழ்நாட்டில் கல்விக்காக நாம் கொண்டுவந்த புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவிகள் பயனடைந்து வருவதைக் கண்டு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

குறிப்பாக, இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள் உயர் கல்வியில் சேருவது 34% உயர்ந்துள்ளது. புதுமைப் பெண்கள் திட்டத்தால் நகர்ப்புற மாணவிகளைக் காட்டிலும் கிராமப்புற மாணவிகள் அதிகம் பயனடைந்துள்ளனர். டிகிரியோடு நிறுத்தாமல் ஆராய்ச்சி படிப்பு வரை பெண்கள் படிக்க வேண்டும்.

புதுமைப்பெண திடடம் தொடர்பான ஆய்வின் முடிவைப் பார்த்து, நான் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க முடியாது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.