கூடங்குளம் அணு உலை கழகத்தில் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு: மத்திய அமைச்சரிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை நேரில் வலியுறுத்தல்
கூடங்குளம் அணு உலை கழகத்தில் உள்ளூா் மக்களுக்கு வேலை அளிக்க வலியுறுத்தி மத்திய பிரதமா் அலுவலகம், அணு சக்தித் துறை இணை அமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங்கிடம் மாநிலங்களவை அதிமுக உறுப்பினா் ஐ.எஸ். இன்பதுரை மனு அளித்தாா்.










