டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தேர்தலா? பாஜக நிர்வாகி சூசகம்!

தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தேர்தல் நடைபெறலாம் என பாஜக நிர்வாகி சூசகமாகக் கூறியிருக்கிறார்.

News image
பேரவைத் தேர்தல்
Updated On :9 பிப்ரவரி 2026, 8:51 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக பாஜக தேசிய அமைப்புச் செயலர் பி.எல். சந்தோஷ் சூசகமாகக் கூறியிருக்கிறார்.

சென்னையில் இன்று பாஜக தேசிய அமைப்புச் செயலர் பி.எல். சந்தோஷ் தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய பி.எல். சந்தோஷ், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் 65 நாள்கள்தான் இருக்கிறது. முதல்கட்டமாகவே தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிடவிருப்பதால் தேர்தல் போட்டி கடுமையாக இருக்கும்.

மூத்த நிர்வாகிகள் தங்களை மட்டும் முதன்மைப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பாஜகவில் நியமித்த தேர்தல் பொறுப்பாளர்கள் அவர்களுக்கான தொகுதிகளில் ஆர்வத்துடன் பணியாற்ற வேண்டும்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக முக்கியத் தலைவர்கள் நயினார் நாகேந்திரன், எல். முருகன், தமிழிசை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேர்தல் தொகுதி பொறுப்பாளர் பதவியிலிருநது விலகுவதாக அறிவித்த அண்ணாமலை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.