பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கிட்டத்திட்ட இறுதி செய்யப்பட்டு பிரசாரத்தையும் தொடங்கியுள்ளது.
சிங்காநல்லூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கு பாஜகவின் பொறுப்பாளராக அண்ணாமலையை நியமித்து கட்சி தலைமை உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால், தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
மேலும், செய்தியாளர்களுடன் அண்ணாமலை இன்று பேசியதாவது:
”பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்றுக்கொண்ட 16-வது நிதிக்குழுவின் பரிந்துரை தமிழகம் பலன் அடைந்துள்ளது. குறிப்பாக வரி பகிர்வில் நாட்டின் வளர்ச்சிக்கு 10% நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது, இது எதிர்கட்சிகளின் வாயை அடைத்துள்ளது.
திமுக அமைச்சர்களை அழைத்து அண்ணாவை பற்றி 10 வரிகள் எழுதச் சொன்னால் யாருக்கும் எழுதத் தெரியாது. இன்றைக்குகூட தேர்வு வைத்து பாருங்கள், யாருக்கும் தெரியாது. அண்ணா... அண்ணா... என்று அவர் பிறந்தநாள், நினைவுநாளில் பேசுவதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் தேர்தலை சந்திக்கப் போகிறோம். அவர்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர். திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைந்த கூட்டணி போன்றது.
விஜய் கட்சிக்கு என்ஜினே இல்லை. விஜய் கட்சியின் என்ஜினை ஓட்ட யார் இருக்கிறார்? மக்களை சிந்திக்க வைக்கும் வகையில் விஜய்யின் பேச்சு இல்லை. விசில் மற்றும் கைதட்டலுக்காகவே விஜய்யின் பேச்சுகள் இருக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
summary
Annamalai resigns from BJP election responsibilities!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? - நயினார் நாகேந்திரன் பதில்!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்! | செய்திகள் : சில வரிகளில் | 3.2.26

தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்! - அண்ணாமலை

தூய்மைப் பணியாளர்களுக்கு தரமற்ற உணவு: அண்ணாமலை குற்றச்சாட்டு
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...


