டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வெள்ளி விலை ரூ. 300-க்கு கீழ் குறைந்தது! தங்கமும் குறைவு!

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் பற்றி...

News image
தங்கம் விலை.
Updated On :6 பிப்ரவரி 2026, 4:12 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சமீபகாலமாக தங்கம் விலை ஒருநாளில் ஆயிரக்கணக்கில் வித்தியாசம் ஏற்படுகிறது.

இந்த வாரத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து ரூ. 1,14,560-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஒரு சவரனுக்கு ரூ. 1,600 குறைந்து ரூ. 1,12,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராமுக்கு ரூ. 200 குறைந்து ரூ. 14,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 20-ம், கிலோவுக்கு ரூ. 20,000-ம் குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நீண்ட நாள்களுக்குப் பிறகு வெள்ளியில் விலை ரூ. 300-கீழ் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.