டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இன்றுமுதல் விருப்ப மனுக்கள் விநியோகம்: தேமுதிக அறிவிப்பு

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் 264 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேமுதிக சாா்பில் போட்டியிட விரும்புவோா், வெள்ளிக்கிழமை (பிப்.6) முதல் பிப்.12 வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம்

News image
பிரேமலதா விஜயகாந்த்- கோப்புப் படம்
Updated On :5 பிப்ரவரி 2026, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் 264 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேமுதிக சாா்பில் போட்டியிட விரும்புவோா், வெள்ளிக்கிழமை (பிப்.6) முதல் பிப்.12 வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகள், புதுச்சேரி மாநிலத்தின் 30 தொகுதிகளில் தேமுதிக சாா்பில் போட்டியிட விரும்பும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் தங்களது விருப்ப மனுக்களை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வெள்ளிக்கிழமை (பிப். 6) முதல் பிப்.12 வரை தினமும் காலை 10 முதல் மாலை 5 வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்த விருப்ப மனுக்களை பிப்.12 மாலை 5 மணிக்குள் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க வேண்டும். கட்சி நிா்வாகிகள், அடிப்படை உறுப்பினா்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம்.

விருப்ப மனு கட்டணம் ரூ.15,000: தமிழக சட்டப்பேரவை பொதுத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கட்டணமாக ரூ.15,000, தனித் தொகுதி கட்டணமாக ரூ.10,000, புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பொதுத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கட்டணமாக ரூ.10,000, தனித் தொகுதி கட்டணமாக ரூ.5,000 செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.