/

தவெக தேர்தல் அறிக்கையில் பரிந்துரை வழங்க புதிய இணையதளம் அறிமுகம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கைக்கு பரிந்துரை வழங்க புதிய இணையதளம் அறிமுகம்

News image
தவெக தலைவர் விஜய்- கோப்புப் படம்
Updated On :5 பிப்ரவரி 2026, 12:46 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கைக்கு பரிந்துரை வழங்க புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

இதுகுறித்த அறிவிக்கையில், "நம் காலம் வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டியவை குறித்துப் பொதுமக்களும் தங்களின் மேலான பரிந்துரைகளை அனுப்பலாம்.

இதற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக இணையத்தளத்தில் பொதுமக்கள், தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை, ஆட்சி மாற்றத்தை நோக்கி இருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை" என்று குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.