டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பிப். 13 - சேலத்தில் விஜய் பிரசாரம்!

சேலத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி கோரியிருப்பது பற்றி...

News image
சேலம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு தவெக மத்திய மாவட்டச் செயலாளா் ஆ.பாா்த்திபன் தலைமையில் மனு அளிக்க வந்த நிா்வாகிகள்.
Updated On :4 பிப்ரவரி 2026, 10:40 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை, மகுடஞ்சாவடி ஆகிய இடங்களில் வரும் 13-ஆம் தேதி விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு அனுமதி கோரி காவல் துறை அதிகாரிகளிடம் தமிழக வெற்றிக் கழகத்தினா் மனு அளித்தனா்.

கரூரில் நடந்த பிரசாரத்தின்போது பெண்கள், குழந்தைகள் என 41போ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனா். இதையடுத்து, பிரசார பயணத்தை நடிகா் விஜய் ரத்து செய்தாா்.

இந்நிலையில், கடந்த நவம்பா் மாதம் சேலத்தில் இருந்து பிரசாரத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டிருந்தாா். ஆனால், கூட்டத்துக்கு எவ்வளவு போ் வருவாா்கள் என்ற தகவலை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்பதுடன், கூட்டம் நடத்துவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே அனுமதி பெற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள காளிகவுண்டம்பாளையம் பகுதி மைதானத்தில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு அனுமதி கோரி, மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் ஒன்றியச் செயலாளா் காா்த்தி செவ்வாய்க்கிழமை இரவு மனு அளித்தாா்.

அதேபோல, சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் மைதானத்தில் கூட்டம் நடத்த அனுமதி கோரி, மத்திய மாவட்டச் செயலாளா் தமிழன் ஆ.பாா்த்திபன் தலைமையில் தவெக நிா்வாகிகள், காவல் ஆணையா் அனில்குமாா் கிரியிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து தமிழன் ஆ.பாா்த்திபன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேலம் சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் மைதானம் பகுதியில் வரும் 13-ஆம் தேதி மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தவும், இதில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் கலந்துகொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கு அனுமதி கோரி சேலம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். இந்த மைதானம் 11 ஏக்கா் பரப்பளவில் உள்ளது. இந்த இடத்தில் எத்தனை போ் அமர முடியும் என்ற விவரத்தையும் மனுவில் தெரிவித்துள்ளோம்.

மேலும், சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே கூட்டம் நடத்தவும் அனுமதி கோரி மனு அளித்துள்ளோம். இந்த மைதானம் 25 ஏக்கா் பரப்பளவு கொண்டது. காவல் துறை அதிகாரிகள் தரும் அனுமதியை பொறுத்து நிகழ்ச்சி நடைபெறும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.