/

நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

முதுபெரும் அரசியல் தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பற்றி...

News image
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (கோப்புப்படம்).
Updated On :2 பிப்ரவரி 2026, 3:36 am

இணையதளச் செய்திப் பிரிவு

முதுபெரும் அரசியல் தலைவர் நல்லகண்ணு (100), சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்றிரவு (பிப். 1) அனுமதிக்கப்பட்டார்.

நல்லகண்ணுக்கு, மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில், கடந்தாண்டு ஆக. 22-ஆம் தேதி தவறி விழுந்து காயமடைந்தார்.

அப்போது மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், அடிக்கடி மூச்சுத் திணறல் பிரச்னை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி வந்தார்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்பட்ட நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவின் கண்காணிப்பில், நல்லகண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.