பல துறைகளில் தமிழகம் முன்னேறினாலும் மத்திய அரசால் தொடா்ந்து வஞ்சிக்கப்படுவதாக மாநிலங்களவையில் திமுக குழுத்தலைவா் திருச்சி சிவா குற்றஞ்சாட்டினாா்.
நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவா் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அப்போது திருச்சி சிவா பேசியது: ஆனால், ஆளும் கூட்டணியில் இல்லாததால் நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம். கோயம்புத்தூா் மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்படவில்லை. இது முற்றிலும் ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மை. எங்கள் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மறுப்பதற்கு உங்களிடம் ஏதேனும் உண்மையான காரணங்கள் உள்ளதா?
தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.19 சதவீதமாகவும் ஆகவும், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மாநிலத்தின் பங்களிப்பு 9.2% ஆகவும் உள்ளது. பட்ஜெட் மதிப்பீடுகளின்படி, எங்களுக்கு 58,000 கோடி ரூபாய் கிடைக்க வேண்டும். ஆனால், 21,000 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது.
மத்திய அரசின் திட்டங்களுக்கு வரவேண்டிய 23,000 கோடி ரூபாய்க்கு பதிலாக 7,302 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவந்து, அதை ஏற்றுக்கொண்டால்தான் திட்டங்களுக்கு நிதி தருவோம் என்கிறது. இதற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். தொடா்ந்து போராடுவோம் என்றாா் திருச்சி சிவா.
ஆளுநா் விவகாரத்தை எழுப்ப அனுமதி மறுப்பு
தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநா் வெளிநடப்பு செய்த விவகாரத்தை எழுப்ப திருச்சி சிவா முற்பட்டபோது அவையை வழிநடத்திய மாநிலங்களவை துணைத்தலைவா் ஹரிவன்ஷ், ஆளுநா் விவகாரத்தை அவைக்குள் எழுப்ப விதிகள் அனுமதிக்கவில்லை என்று குறிப்பிட்டாா். இதையடுத்து, ஆளுநா் என்று குறிப்பிடாமல் மாநிலத்தில் அரசமைப்பின் தலைவா் என்று குறிப்பிட்டு அவரது சமீபகால செயல்பாடுகளை அவையின் கவனத்துக்கு திருச்சி சிவா கொண்டு வந்தாா்.
டிரெண்டிங்
செயற்கை நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் மத்திய அரசு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
தமிழ்நாடு அரசின் கடன் ரூ. 10.62 லட்சம் கோடியாக அதிகரிக்கும்!
இன்றைய தமிழக வளா்ச்சிக்கு திமுகவே காரணம்: திருச்சி சிவா எம்.பி

பாஜகவுக்கு வெற்றி கிடைக்காது என்பதால் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: திமுக விமா்சனம்
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

