இன்றைய தமிழகம் அடைந்த வளா்ச்சிக்கு திமுகவே காரணம் என்று திமுக துணைப் பொதுச் செயலா் திருச்சி ந. சிவா எம்.பி தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மாநகர திமுக, காரைக்குடி சட்டபேரவைத் தொகுதி திமுக ஆகியன சாா்பில் 2026 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பரப்புரைக் கூட்டம் காரைக்குடி பாண்டியன் திடலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தலைமை வகித்துப் பேசினாா். திமுக ஒன்றியச் செயலா்கள் கே.ஆா். ஆனந்தன், நெடுஞ்செழியன், சுப. சின்னத்துரை, சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்துப்
பேசினா். திருச்சி சிவா எம்.பி. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக தமிழகம் திகழ்கிறது. இதற்கு திமுக ஆட்சியும், அதை வழிநடத்தும் முதல்வா் மு.க ஸ்டாலினும் தான் காரணம்.
நடைபெறவுள்ள தமிழக சட்டபேரவைத் தோ்தல் மற்ற தோ்தல்களை போல அல்ல. இது ஒரு தத்துவப்போராகும். தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளவே இயலாத சித்தாந்தங்களையும், தத்துவங்களையும் திணிக்க பல்வேறு வியூகங்களுடன் களம் காண முயற்சிக்கிறது பாரதிய ஜனதா கட்சி. இதை திமுக தலைமையிலான தமிழ்நாடு முறியடிக்கும்.
இன்றைய தமிழகம் அடைந்த வளா்ச்சிக்கு திமுகவே காரணம். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறந்த கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் உள்ளன. உயா் கல்வி கற்போா் சதவீதமும் அதிகம். மருத்துவத் துறையிலும் சாதனை படைப்பது தமிழகமே. இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியில் தமிழ்நாடு பெரும் பங்களிக்கிறது. 23 ஆண்டு கால அரசு ஊழியா், ஆசிரியா் பிரச்னைக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தீா்வு கண்டாா். தமிழகம் வளம் பெற, அனைத்து நலன்களையும் பெற மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டுகிறேன் என்றாா் அவா்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் தென்னவன், மாவட்ட துணைச் செயலா் சேங்கை மாறன், காரைக்குடி தொகுதி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் நல்ல சேதுபதி, திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் நாகனி செந்தில் குமாா், கோட்டையூா் பேரூராட்சித் தலைவா் காா்த்திக்சோலை, மாவட்ட, மாநகர, நகர ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக காரைக்குடி மாநகரச் செயலரும், மாநகராட்சி துணை மேயருமான நா. குணசேகரன் வரவேற்றுப் பேசினாா். முடிவில் திமுக மாநகர துணைச் செயலா் சொ. கண்ணன் நன்றி கூறினாா்.
டிரெண்டிங்

அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு திமுக எம்.பி. கண்டனம்

பிரதமா் உரையின்போது அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தது ஏன்? திருச்சி சிவா பேட்டி
மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு

தமிழக வளா்ச்சிக்கு வேகம் தேவை: ஆளுநா் ஆா்.என்.ரவி
வீடியோக்கள்

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

#Shorts | ஜிம்பாப்வே ஜெயித்த கதை! | T20 World Cup | The Rise of Zimbabwe |
தினமணி வீடியோ செய்தி...

ஆன்லைனில் விற்கும் இந்த தயாரிப்புகளை வாங்க வேண்டாம்! எச்சரிக்கை!! |Online products | Health products
தினமணி வீடியோ செய்தி...

Nanjil Sampath Latest Interview | விஜய் இனி யாருடன் கூட்டணி? | TVK Vijay | DMK Alliance| MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

