/

பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளது: வைகோ

2026–2027 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

News image
கோவையில் வைகோ.
Updated On :2 பிப்ரவரி 2026, 4:31 am

இணையதளச் செய்திப் பிரிவு

2026–2027 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால் கூடுதல் நிதி ஒதுக்கீடு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அந்த நம்பிக்கை முற்றிலும் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறினார். கச்சா எண்ணெய் விலை 50 டாலர்களாக இருந்த போதிலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படாதது மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சித்தார்.

மேலும், 11 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், 7 சதவிகித பொருளாதார வளர்ச்சியை அடைவது சாத்தியமில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார். இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகம் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக கூறிய வைகோ, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு கூட உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

இரட்டை இலக்கில் தொகுதிகள் குறித்து இப்போதே பேச முடியாது என்றும் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு கோரிக்கை எதையும் மதிமுக வைக்கவில்லை என்றும் கூறினார். மேலும் திராவிட மாடல் ஆட்சி தொடரும்; முதலமைச்சராக மீண்டும் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பார் என நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டிலேயே நல்ல பெயர் இல்லை என்றும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தனது தேர்தல் பிரசாரம் இருக்கும் எனவும் வைகோ தெரிவித்தார்.

summary

MDMK General Secretary Vaiko has accused that Tamil Nadu has been completely neglected in the budget for the year 2026–2027.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.