/

கோவை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
தற்கொலை- கோப்புப் படம்
Updated On :2 பிப்ரவரி 2026, 7:59 am

இணையதளச் செய்திப் பிரிவு

கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம், நெடுஞ்சாலையில் உள்ள பிரஸ் காலனி, சாந்தி மேடு பகுதியில் உள்ள தம்பு நகரில் வசித்து வந்தவர் கமலேஷ் (48). இவர் கதிர் நாயக்கன்பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி இலக்கியா (45) செவிலியராக பணியாற்றியவர். இவர்களுக்கு எக்சிதா ஏஞ்சேல் (10) என்ற மகள் உள்ளார். வீரபாண்டி பகுதியில் உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இலக்கியா நீண்ட நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்காக அவர் சிகிச்சையும் எடுத்து வந்தார். ஆனால் பலனளிக்காத காரணத்தினால் வருத்தமுற்ற கணவன், மனைவி இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்களுடைய மகளுக்கு விஷத்தை கொடுத்து விட்டு, தாங்கள் இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து திங்கள்கிழமை காலை அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் மூவரது சடலங்களை மீட்டு கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.