/

தமிழ்நாட்டுக்காக எதுவுமில்லை: கனிமொழி எம்.பி.

தேர்தல்கள் இருந்தும்கூட தமிழ்நாட்டுக்காக எதையும் அறிவிக்கவில்லை: மத்திய பட்ஜெட் மீது கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

News image
கனிமொழி எம்.பி.- பிடிஐ
Updated On :1 பிப்ரவரி 2026, 1:43 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தேர்தல்கள் இருந்தும்கூட தமிழ்நாட்டுக்காக எதையும் அறிவிக்கவில்லை என்று மத்திய பட்ஜெட் மீது திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களுடன் கனிமொழி எம்.பி. பேசுகையில், “இந்த பட்ஜெட் மிகவும் ஏமாற்றமளிக்கிறது. பெரும்பாலான மாநிலங்கள் 50 சதவிகித நிதிப் பகிர்வைக் கோரியபோதிலும், மீண்டும் 41 சதவிகிதம் மட்டுமே கூறியுள்ளனர். இது அனைத்து மாநிலங்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும், இந்த பட்ஜெட்டில் உறுதியானதாக எதுவுமில்லை.

தேர்தல்களை மனதில்கொண்டு கூட, அவர்கள் (பாஜக அரசு) தமிழ்நாட்டுக்காக எதையும் அறிவிக்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் மண்ணை ஆட்கொள்ள மட்டும் அவர்கள் விரும்புகின்றனர்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, தமிழகத்துக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி துரோகமிழைப்பதாக மத்திய பட்ஜெட்டைக் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.

தொடர்ந்து, தமிழ்நாட்டு மக்களுடன் பாஜக அரசு போர் புரிவதாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.