ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார்! முதல்வர் விஜய்யின் முடிவு சரிதானா?

அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் என்று முதல்வர் விஜய் வெளியிட்ட முடிவு விவாதத்துக்கு உரியதாக இருப்பது பற்றி..

CM Vijay hints at action over alleged irregularities in DMK-era TN govt

முதல்வர் விஜய் - DIPR

Published On :20 ஆகஸ்ட் 2026, 1:50 pm IST

மகளிர் உரிமைத் தொகை, மாணவர்கள் உதவித் தொகை, பயிர்க் கடன் தள்ளுபடி என எல்லாவற்றுக்கும் ஒரு தகுதியை நிர்ணயம் செய்யும் அரசு, ஒரு எம்எல்ஏ கார் கேட்டதும் அனைவருக்கும் கார் என அறிவிப்பது என்ன நியாயம்? என்பதே விவாதத்துக்கு உரியதாக உள்ளது.

பொதுவாக, தமிழக அரசு மக்களுக்காகக் கொண்டு வரும் எந்தவிதமான திட்டங்களாக இருந்தாலும், அது அனைவருக்கும் கிடைக்காது. அதற்கான சில தகுதிகள் நிர்ணயம் செய்யப்படும். ஒருவருக்கு நிலமில்லை என்றால் வீட்டு மனைப் பட்டா, குடிசை வீடிருந்தால் அவர்களுக்கு தளம் போட்ட வீடு கட்டித்தரப்படும் என்பது போன்ற திட்டங்களைத்தான் அரசுகள் அறிவிக்கும்.

ஒருவருக்கு வீடு இல்லை என்று சொன்னால், அனைவருக்கும் வீடு கட்டிக்கொடுக்கப்படாது என்பதை அனைவரும் அறிந்திருக்கிறார்கள். அது நியாயமும்தான். ஆனால், பேரவையில் ஒரு எம்எல்ஏ கார் இல்லை என்று சொன்னதும் அனைவருக்கும் கார், வாகனப் படி என அறிவித்த முதல்வருக்கு மக்கள் எழுப்பும் மற்றொரு கேள்வி, அனைத்துக்கும் நிதிநிலையைக் காரணம் கூறும் முதல்வர் விஜய், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வாங்குவதற்கு நிதிநிலை குறித்து கவலைப்படவில்லையா?

அது மட்டுமல்ல, கார் இல்லை, ஆட்டோவில் வருகிறேன் என்று சொன்ன எம்எல்ஏவுக்கு வங்கியின் வைப்புத் தொகை ரு. 30 லட்சம் உள்பட ரூ. 72 லட்சம் சொத்து மதிப்பு இருப்பதாகவும், அவரிடம் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள டாடா - டிகோர் வகை கார் இருப்பதாகவும் அவரே பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதில் கொடுக்கும் காரை இனோவா காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்ன எம்எல்ஏவின் சொத்து மதிப்புகளும் வெளியாகி வருகிறது.

அது மட்டுமல்ல, ஏற்கனவே, தமிழ்நாட்டில் எம்எல்ஏக்களுக்கு மாதந்தோறும் பல்வேறு படிகளுடன் சம்பளம் ரூ.1,05,000 வழங்கப்படுகிறது. இதில், எம்எல்ஏ சம்பளம் ரூ.30 ஆயிரம், படிகள் ரூ.10 ஆயிரம், தொலைபேசிக் கட்டணம் ரூ.7 ஆயிரம், தொகுதிப் படி ரூ.25,000, ஏற்கனவே வாகனப்படி ரூ.25 ஆயிரம், அஞ்சல் செலவுக்கு ரூ.2500 என ஒரு லட்சத்துக்கு மேல் மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

தற்போது, முதல்வர் அறிவித்திருக்கும் வாகனப்படி மற்றும் உதவியாளர் படி எல்லாம் சேர்த்தால் மாதந்தோறும் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான தொகை வழங்கப்படும்.

எனவே, மக்கள் பணியாற்ற வந்திருக்கும் எம்எல்ஏக்கள், சொந்தமாக கார் இல்லை என்றாலும், இந்த ஊதியத்தில் கார் வாங்கலாமே? கார் வாங்குவதற்கு பணமில்லை என்றாலும்கூட, மாதத் தவணையில் கார் வாங்குவதற்கு பல்வேறு வாய்ப்புகள் இருக்கும்போது, மக்கள் பணத்தில் கார் வாங்க வேண்டிய அவசியமில்லை என்பதே, பேருந்திலும், ரயிலிலும், நடந்தே சென்றும் பணியாற்றும் தினக்கூலிகளின் கருத்தாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல், மக்கள் பிரதிநிதிகள், காரில் வந்து சென்றால், மக்கள் பிரச்னைகளை எப்படி அறிவார்கள், மக்களோடு மக்களாக ரயிலிலும் பேருந்திலும் ஏன் ஆட்டோவில் ஏறி வந்தால்தான், உண்மையில் கள நிலவரம் எப்படி இருக்கிறது? மக்கள் பிரச்னைகள் என்ன? எப்படி சரி செய்ய வேண்டும் என்பதையெல்லாம் அறிந்துகொள்ள முடியும் என்றும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

Summary

Cars for all MLAs! Is Chief Minister Vijay's decision right?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.