ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்

விசிகவும் தவெகவும் இனி களத்தில் இணைந்தே பயணிக்கும் என திருமாவளவன் கூறியது குறித்து...

Thirumavalavan in ulundurpet

திருமாவளவன் - DNS

Published On :17 ஆகஸ்ட் 2026, 8:24 pm IST

விசிகவும் தவெகவும் இனி இந்த களத்தில் இணைந்தே பயணிக்கும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (ஆக. 17) தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு திங்கள்கிழமை (ஆக.17) நடைபெற்றது.

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 40 ஏக்கா் பரப்பளவில் உளுந்தூா்பேட்டை புறவழிச் சாலைப் பகுதியில் மாநாடு நடந்தது.

இதில் திருமாவளவன் பேசியதாவது:

''இன்று ஆளும் முதல்வர் சி. ஜோசப் விஜய் உடன் கூட்டணி வைத்துள்ளோம். இனி தமிழக அரசியல் களத்தில் தவெக உடன் விசிக இணைந்தே பயணிக்கும். விடுதலைச் சிறுத்தை கட்சியும் ஆளும் கட்சியாக தமிழகத்தில் மாறும்.

இத்தனை காலம் ஆளும் கட்சியுடன் நாம் கூட்டணி வைத்தோம். இனி விசிகவும் ஆளும் கட்சியாக மாறும்.

மாநாட்டில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சாதியையும் சாதியை பாதுகாக்கும் மதவாதத்தை எதிர்த்து தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க இம்மாநாடு முன்மொழிகிறது.

மதச்சார்பற்ற மொழி வழி தேசியத்தை கட்டியெழுப்பவும், தமிழ்நாட்டில் தமிழ் தேசிய எழுச்சியையும், நாட்டில் உள்ள மற்ற இனங்களிடையே நல்லிணக்கம், நட்புறவை வளர்த்தெடுக்க மாநாடு உறுதி எடுக்கிறது.

இந்தியாவில் அனைத்து தேசிய இனங்களுக்கும் தன்னாட்சி அதிகாரம், மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளை உறுதி செய்யும் வகையில் தேசிய இனங்களுடன் கூடிய ஒன்றிய கூட்டாட்சியை உருவாக்க வேண்டும்.

மாநில உரிமைகளைப் பறிக்கும் மையப்படுத்தப்படும் போக்கை தடுத்து அரசமைப்பின்படி கூட்டாட்சியை வலுப்படுத்த மாநாடு வலியுறுத்துகிறது.

மாநில இன உரிமை, பொருளாதார உரிமை, அரசியல் உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதற்கு மாநில சுய ஆட்சியை உறுதி செய்ய வேண்டும்.

கல்வி, பொருளாதாரம், கலை, நிர்வாகம், இலக்கியம், பண்பாடு என அனைத்துத் துறைகளிலும் மாநிலங்களின் அதிகாரத்தை விரிவுபடுத்தும் அரசமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.

ஒரே தேசம், ஒரே ஆட்சி, ஒரே கட்சி என்ற ஆதிக்க அரசியலை நிராகரிக்க வேண்டும். சமத்துவ ஜனநாயக இந்தியாவை கட்டியெழுப்ப வேண்டும்.

பிறமொழி, பிற இன மக்களை பகையாகக் கருதாமல், அனைத்து தேசிய இனங்களின் எழுச்சிக்கு அரசமைப்பு சட்டப்படி கூட்டாட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு 125 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டின் அழைப்பை ஏற்று வருகைத்தந்தவர்களுக்கு நன்றி. தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி விசிக என்பதை இந்த மாநாடு உறுதிப்படுத்தியிருக்கிறது. நாம் அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்கிறோம். வருங்காலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் ஆளும் கட்சியாக வளர வேண்டும். இத்தனை காலம் ஆளும் கட்சியுடன் நாம் கூட்டணி வைத்தோம். இனி விசிகவும் ஆளும் கட்சியாக மாறும்.

இன்று ஆளும் முதல்வர் சி. ஜோசப் விஜய் உடன் கூட்டணி வைத்துள்ளோம். இதி தமிழக அரசியல் களத்தில் தவெக உடன் விசிக இணைந்தே பயணிக்கும்.

கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளதால், நீண்ட நேரம் பேச விரும்பியும் உரையை சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன். அழைப்பை ஏற்று வருகைப்புரிந்த அனைவருக்கும் நன்றி'' எனக் குறிப்பிட்டார்.

Summary

VCK and TVK will travel together from now on: Thirumavalavan in ulundurpet

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.