ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நிறைய பேருக்கு சுகர் இருக்கு... மயங்கி மயங்கி விழுறாங்க..! - ஓபிஎஸ் விரக்தி!

சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் பதிலுரைக்கு, ஓபிஎஸ் பேசியது குறித்து...

Published On :17 ஆகஸ்ட் 2026, 5:57 pm IST

சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜின் பதிலுரைக்கு, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசியது வைரலாகியுள்ளது.

சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று காலை 9.30 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகளில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்துப் பேசினார்.

அப்போது, குறுக்கிட்டுப் பேசிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், “தமிழ்நாடு சட்டப்பேரவை காலை 9.30 மணிக்கு கூடியது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் 3.30 மணிக்கு பேசத் தொடங்கினார். தற்போது 52 நிமிடங்கள் ஆகிவிட்டது.

சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைகளின் பதிலுரையாகத்தான் அவர் பேச வேண்டும், தேவையில்லாத பிரச்னையைப் பற்றி பேசக்கூடாது.

நிறைய பேருக்கு சுகர் இருக்கு, மயங்கி மயங்கி விழுகிறார்கள். பயங்கர வேதனையாக இருக்கிறது. சமாளிக்க முடியவில்லை. இல்லையென்றால் பதிலுரையை காலையில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

Summary

Former Chief Minister O. Panneerselvam's remarks in the Legislative Assembly, made in response to Health Minister Arunraj's reply, have gone viral online.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.