ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய நயினார் நாகேந்திரனுக்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது பற்றி...

Nainar Nagendran, P. Shanmugam

நயினார் நாகேந்திரன், பெ. சண்முகம் - கோப்புப் படம்

Published On :16 ஆகஸ்ட் 2026, 12:20 pm IST

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று (ஆக. 15) நடைபெற்ற விழாவில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "சட்டப்பேரவையில் 'அப்பா எங்கே, அப்பா எங்கே' என்று தேடினால் எப்படி தெரியும்? வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார்? என்று சொல்வார்கள். சட்டப்பேரவையில் அப்பாவைத் தேடினால் யாருக்கு தெரியும்?" என்று பேசியிருந்தார்.

நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தனது எக்ச் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

நயினார் நாகேந்திரன் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பெண்களை மதிப்பது பாஜகவின் அகராதியிலேயே இல்லாத விஷயம் என்பது அனைவருக்கும் தெரியும்.

பொது வாழ்வில் இருப்பவர்கள் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்ற குறைந்தபட்ச உணர்வு கூட இல்லாமல் அவர் பேசியிருக்கிறார். நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை. தமிழ்நாடு அரசு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

The Communist Party of India (Marxist) [CPI(M)] has condemned Tamil Nadu BJP President Nainar Nagendran for making remarks that demean women.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.