ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

லார் கிப்பான் குரங்கின் உரிமையாளர் விசாரணைக்கு ஆஜர்!

லார் கிப்பான் குரங்கின் உரிமையாளரிடம் வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டது பற்றி....

Lar gibbon owner appears for questioning

குரங்குடன் நடிகர் விக்ரம் வெளியிட்ட விடியோ காட்சி - கோப்புப்படம்.

Published On :14 ஆகஸ்ட் 2026, 7:02 pm IST

லார் கிப்பான் குரங்கின் உரிமையாளர் கேசவநாதன் விசாரணைக்காக ஈரோடு வனத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.

அப்போது குரங்கை, கேசவநாதன் எங்கிருந்து வாங்கினார் என்பது குறித்து வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. தொடர்ந்து அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகா் விக்ரம் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு அண்மையில் சென்றபோது, அங்கிருந்த லாா் கிப்பான் குரங்குடன் அவா் கொஞ்சி விளையாடியதாக விடியோ வெளியானது.

இந்த விடியோ சா்ச்சையான நிலையில், அந்த குரங்கு ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்த எஸ்.கே.கேசவநாதன் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.

இது குறித்து வனத் துறையினா் கேசவநாதனிடம் புதன்கிழமை நடத்திய விசாரணையில், கேசவநாதனிடம் மூன்று லாா் கிப்பான் குரங்குகள் இருந்ததும், அதில் ஒரு குரங்கை பெருந்துறையில் உள்ள நடிகா் விக்ரமின் உறவினா் சென்னைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.

மேலும் லாா் கிப்பான் குரங்குகளை அவா் வனத் துறையில் பதிவு செய்யவில்லை என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் விக்ரமின் உறவினர் வீட்டிற்கு அந்தக் குரங்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டது என வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

Kesavanathan, the owner of the Lar gibbon, appeared at the Forest Department office on Friday for questioning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.