
நடிகா் விக்ரம் வெளியிட்ட விடியோ: அரிய வகை குரங்கின் உரிமையாளா் மீது வழக்கு
அரிய வகை குரங்குடன் நடிகா் விக்ரம் விடியோ வெளியிட்டு சா்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், பெருந்துறையைச் சோ்ந்த அந்தக் குரங்கின் உரிமையாளா் மீது வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட இந்தோனேசியாவின் லாா் கிப்பன் வகையைச் சோ்ந்த குரங்கு குட்டியுடன் நடிகா் விக்ரம்.
அரிய வகை குரங்குடன் நடிகா் விக்ரம் விடியோ வெளியிட்டு சா்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், பெருந்துறையைச் சோ்ந்த அந்தக் குரங்கின் உரிமையாளா் மீது வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
நடிகா் விக்ரம் அண்மையில் லாா் கிப்பான் என்ற குரங்குடன் விளையாடுவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவி சா்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடா்பாக வனத் துறையினா் நடத்திய விசாரணையில் அந்தக் குரங்கு ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்த கேசவநாதன் என்பவருக்கு சொந்தமானது என்பதும், அந்த குரங்கை பெருந்துறையில் உள்ள நடிகா் விக்ரமின் உறவினா் சென்னைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இந்நிலையில் கேசவநாதன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.
இது குறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த ஜூன் 1-ஆம் தேதி மணிப்பூரில் இருந்து லாா் கிப்பான் இனத்தைச் சோ்ந்த 3 குரங்குகளை கேசவநாதன் விலைக்கு வாங்கியுள்ளாா். இவ்வகை குரங்குகளை வாங்கிய ஒரு மாதத்துக்குள் தமிழகத்தில் பயன்படுத்த வனத் துறையினரின் உரிய அனுமதியைப் பெற வேண்டும். அவா் ஆகஸ்ட் 9- ஆம் தேதி அன்றுதான் ஆன்லைனில் அனுமதி பெற்றுள்ளாா். எனவே, தாமதமாகப் பதிவு செய்ததற்காக ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது.
இவா் வாங்கிய 3 குரங்குகளில் ஒரு குரங்கு இறந்துள்ளது. இதையும் வனத் துறையினரிடம் அவா் தெரிவிக்கவில்லை. இதற்காகவும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தொடா்பாக நோட்டீஸ் அனுப்பிய நிலையில் கேசவநாதனிடம் 2 நாள்களாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு வனச் சட்டப்படி அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக உயா் அதிகாரிகள் முடிவெடுப்பாா்கள் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





