ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடுமா? யாரைச் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி?

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி பேட்டி குறித்து...

எடப்பாடி பழனிசாமி

Published On :14 ஆகஸ்ட் 2026, 1:13 pm IST

சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடுமா? என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் போராட்டத்தைப் புறக்கணித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், மேக்கேதாட்டு விவகாரத்தில் மெத்தனம் காட்டி - தமிழகத்திற்கு உரிய தண்ணீரை முறையாக பெற்று தராத தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் இருந்து ஒரு‌ பிரதமர் வர வேண்டும் என்ற ஆதவ் அர்ஜுனா கூறியது தொடர்பாக கேட்டதற்கு, ”அவர் கனவுதான் காண முடியும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நூறு‌ நாள்‌ ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ரீல்ஸ் - ரீல்தான்.

இவர்கள் பொறுப்பேற்ற‌ பிறகு விவசாயிகள், செவிலியர்கள், மருத்துவர்கள் போராட்டத்தைத்தான் பார்க்கிறோம். ஏற்கனவே உள்ள திட்டங்களில் வெற்றி என்று‌ பெயர் சேர்ப்பதுதான் நூறு‌ நாள்களில் தவெக செய்த சாதனை.

இந்த அரசு வரும் காலங்களில் என்னென்ன வரியெல்லாம் உயர்த்த போகிறார்கள் என்று‌ பார்க்கத்தானே போகிறோம்” என்றார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் போராட்டத்தை புறக்கணித்தது தொடர்பாக கேட்டதற்கு, ”திருமணத்தில் சீப்பை எடுத்து, ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடுமா?” என அவர் பதில் அளித்தார்.

Summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has spoken to the media regarding former Minister Velumani and others skipping the protest.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.